இலங்கை

ஓகஸ்ட் மாதம் முதல் பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தினை திறப்பதற்கு தீர்மானம்

சுற்றுலாத்துறை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது இலங்கை வருவதற்காக வெளிநாட்டினர் காத்திருக்கின்றனர் என கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனை கடந்த இரண்டாம் திகதியில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது.
சுற்றுலாத்துறை மீதான கட்டுப்பாடுகளை  தளர்த்தும் போது இலங்கை வருவதற்காக வெளிநாட்டினர் காத்திருக்கின்றனர். கொவிட் 19 நோய்த் தொற்று பரவலை நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதையடுத்தே அவர்கள் இலங்கைக்கு வர ஆர்வம் காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டினரின் வருகைக்காக திறப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரிலேயே நாம் விமான நிலையத்தைத் திறக்கவுள்ளோம். அவ்வாறு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கட்டாயமாக பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க