நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலுக்குரிய காலம் வரை காத்திருக்காது, நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறினார்.
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை அதிகரித்துள்ளமையானது, எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய சம்பவங்கள் முதலீட்டாளர்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க