வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க-ரஷ்ய கப்பல்கள் மோதவிருந்தன-இருநாடுகளும் குற்றசாட்டு

நடுக்கடலில் ரஷ்ய-அமெரிக்க கப்பல்கள் மோதிக்கொள்ளவிருந்த சம்பவம் குறித்து இருநாட்டுக் கடற்படையினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதுகுறித்து ரஷ்ய தரப்பு வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில், வெள்ளிக்கிழமை காலை (நேற்று)தென்சீனக் கடலில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்க கடற்படையின் யு .எஸ்.எஸ் சான்செல்லோர்ஸ்வில்லே என்ற கப்பல், தனது பாதையில் இருந்து சட்டென விலகி ரஷ்யாவின் வினோக்ரடோவ் என்டி-சப்மெரைன் கப்பலின் பாதையில் திடீரென குறுக்கிட்டதாகக் கூறியுள்ளது.

இரு கப்பல்களுக்கும் இடையில் 164 அடி தூரம் மட்டுமே இடைவெளி இருக்கும் வகையில் நெருங்கி வந்ததாகவும், குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , ரஷ்ய கப்பலில் மோதாமல் இருக்க 50 முதல் 100 அடி தூரம் வரை தங்கள் கப்பலை பின்னோக்கி இயக்கியதாகவும், தொழில்முறையற்ற நடவடிக்கையை ரஷ்ய கடற்படை மேற்கொண்டதாகவும் அமெரிக்கக் கடற்படை குற்றம்சாட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க