அழகு / ஆரோக்கியம்

ஆரோக்கியத்திற்கான சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

  • வேர்க்கொம்பை (சுக்கு) தூளாக்கி எலுமிச்சைச் சாறுடன் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
  • தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் எலுமிச்சைச் சாற்றை விட்டு , கொதிக்க வைத்து ஆறியதும் மூட்டுகளில் தேய்த்தால் மூட்டு வலி குணமாகும்.
  • குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் உடன் குணமாகும்.
  • வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கும். இதற்கு காலையிலும் மாலையிலும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
  • இரவில் ஒரு தேக்கரண்டியளவு  ஓமத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின் காலையில் வடித்து தேனுடன் கலந்து குடித்தால் உடல் பருமனை குறைக்கலாம்.
  • நீரழிவு நோய்க்கு வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து , சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம் , வெள்ளைப் பூண்டு மிளகு சேர்த்து வறுத்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று , உடலுக்கு தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் நீரழிவு நோய் கட்டுப்படும்.

கருத்து தெரிவிக்க