2024ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான நடவடிக்கையாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன விசேட இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதற்கிணங்க இயற்கை அனர்த்தங்களினால் உயர்தர பரீட்சைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்தினூடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் அல்லது 1911 என்ற இலக்கத்தினூடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கும் எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி முதல் டிசம்பர் 20ம் திகதி வரை தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க