உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மைத்திரி, ரணில், மஹிந்தவை கூட்டாக சந்திக்கும் மகாநாயக்கர்கள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரையும் கூட்டாக தலதாமாளிகைக்கு அழைத்து சங்க பிரகடன ஆலோசனையை முன்வைப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்கிரிய, மல்வத்த உட்பட நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் உட்பட 15 விடயங்களை மையப்படுத்தியே  சங்க பிரகடன ஆலோசனை முன்வைக்கப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை சீர்செய்தல், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துதல் என்பன உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்திற்கொண்டே பௌத்த சங்க சபைகள் தீர்மானத்தை எடுத்துள்ளன.

கருத்து தெரிவிக்க