பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் நடப்பு செம்பியன் சிமோனா ஹாலேப் காலிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டியில் நடப்பு செம்பியனும், 3ஆம் நிலை வீராங்கனையுமான ருமேனியாவின் சிமோனா ஹாலேப் மற்றும் அமெரிக்காவின் 17 வயதாகும் அமண்டா அனிசிமோவாவும் மோதினர்.
இதில் அமாண்டா அனிசிமோவா 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஹாலேப்பை வீழ்த்தி வெற்றிகண்டார்.
நடப்பு செம்பியனான ஹாலேப், இளம் வீராங்கனையிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி இருப்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து தெரிவிக்க