வெளிநாட்டு செய்திகள்

அணுவாயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நாமும் கைவிட தயார் -ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வாஷிங்டனுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் அதனைக் கைவிட மாஸ்கோவும் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது,  ஆயுதக் குறைப்பு உடன்படிக்கை தொடர்பில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு காலாவதியாகும்.

அதனைப் புதுப்பிப்பது தொடர்பில் அமெரிக்கா ரஷ்யாவுடன்
எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை .

அணுவாயுதங்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்க உதவும் அந்த உடன்படிக்கை முடிவடைந்தால் அணுவாயுதப் போட்டிக்கு அது வித்திடும்.

அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சில், அணுசக்தித் திறன் கொண்ட நாடுகள் அனைத்தும் ஈடுபடவேண்டும் என்று புட்டின் வலியுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க