வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க-சீனா வர்த்தக போர் உச்சம்- போராட தயார் என்கிறது சீனா

அமெரிக்கா மற்றும் சீனாவிடையே காணப்படும் வர்த்தக போரை அமெரிக்கா அதிகரிக்க செய்யுமெனில் இறுதி வரை போராட தயாரென சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி தோல்விகண்டு வரும் நிலையில் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதாக அமரிக்க தெரிவித்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு மேலும் 20 இலட்சம் கோடி ரூபாய்க்கு வரிவிதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சீன வர்த்தகத்துறை செய்தி தொடர்பாளர் காவ் பெங்(gao feng), சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தாம் போராட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவில் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க