இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அமையின்மையை அடுத்து இந்திய தென்பகுதி மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவின் கரையோர மற்றும் ஏனைய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத்தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை அடுத்து தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவிவிலகுமாறு கோரப்பட்டது.
இதனை வலியுறுத்தி பௌத்த பிக்கு ஒருவர் உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தினார்.
இந்தநிலையில் குறித்த மூவர் மாத்திரமன்றி, அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகினர்.
இந்தநிலையில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களுடன் இணையக்கூடும் என்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலேயே தென்னிந்திய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதியன்று இலங்கைக்கு செல்லும்போது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க