விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி நல்ல முன்னேற்றம்: சந்திக்க ஹதுருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது நல்ல மனோநிலையில் உள்ளதாக அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

இலங்கை அணி இந்த வெற்றியை அடுத்து நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். ஒரு போட்டியில் தோல்வியை சந்திக்கும் போது அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இனி வரும் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவார்கள் எனவும் சந்திக்க ஹதுருசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க