தொடர் போராட்டங்களுக்கு பிறகு சூடான் ராணுவம் ஜனநாயக தேர்தல் ஒன்றினை நடாத்த உறுதியளித்துள்ளது.
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் சூடானில் ஜனநாயக தேர்தல் நடத்துமாறு கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ராணுவம் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 30 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒன்பது மாதங்களுக்குள் ஜனநாயக தேர்தலை நடத்த உறுதியளித்துள்ளது.
இடைக்கால இராணுவ சபையின் தலைவர் அப்துல் பட்டா அல் பர்கான் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நேர்மையான முறையில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்படும் என கூறினார்.
கருத்து தெரிவிக்க