உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான சிறப்புரிமைகளை பறிக்கவும்

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி துறந்துள்ள நிலையில்,  அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளும் உடன் பறிக்கப்படவேண்டும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திக்க அனுருத்த வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்துவதற்காகவே கூட்டு  எதிரணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எனினும், இது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரேரணை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட்டாக  பதவி விலகியுள்ளனர்.

இது தவறான நடவடிக்கையாகும்.

அடிப்படைவாதிகளை பாதுகாப்பதற்கு ஒப்பான செயலாகும்.

குறிப்பாக கபீர் ஹாசீமுக்கு கேகாலை மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களும் வாக்களித்துள்ளனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் இப்படியானதொரு முடிவை எடுத்திருக்ககூடாது.

அமைச்சு, இராஜாங்க  மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிவிட்டனர் எனக் கூறப்பட்டாலும், அரசின் சிறப்புரிமைகளை இன்னும் அனுபவிக்கின்றனர்.

எனவே, பதவி விலகிவிட்டனர் என்றால் அவை உடன் பறிக்கப்படவேண்டும்.” என்றும் கூறினார் இந்திக்க அனுருத்த.

கருத்து தெரிவிக்க