உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கார்டினலின் செயலை மங்கள சமரவீர கண்டித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உணவுத்தவி;ர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அத்துரலியே ரத்தன தேரரை, காடினல் மல்கம் ரஞ்சித் சந்திக்க சென்றமையானது. இனவாதத்தை தூண்டும் செயல் என்று விமர்ச்சிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோர் பதவிவிலகவேண்டும் என்றுக்கோரி அத்துரலியே ரத்தன உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் அவரை சென்று காடினல் மல்கம் ரஞ்சித் சந்தித்திருந்தார்.

இது வெறுப்பை சிதறவைப்பது மட்டுமன்றி இனவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கை என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் வத்திக்கான் நிர்வாகம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மங்கள சமரவீர கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க