முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தத் தவறினால் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் குழுவாக செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அரசாங்கத்திற்கான ஆதரவை தாம் விலகிக்க கொள்ள போவதில்லையெனவும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இந்த கூட்டத்தின்போது முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த முடிவை அறிவிப்பதற்காக தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து நாடாளுமன்ற, அமைச்சர்கள் உறுப்பினர்கள் பிரதமர் ரணிலை சந்திக்க செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று மாலை அவர்கள் கூட்டாக ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான நேரத்தை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முஸ்லிம் தரப்பு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள் தாங்கள் எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றிக்கொள்ளுமாறும், அதுகுறித்து மீண்டுமொருமுறை சிந்திக்குமாறும் கேட்டுள்ளதோடு அவர்களது இராஜினாமாவை பிரதமர் மற்றும் பொருளாதார அமைச்சர் மங்கள் சமரவீர ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதுதொடர்பான இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படுமெனவும் அதுவரையில் பொறுமை காக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொருளாதார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் முஸ்லிம் அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க