இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கைது

நேற்று (ஏப்ரல் 01) புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்  புத்தளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து விற்பனைக்கு தயாராகவிருந்த 3000 வெளிநாட்டு சிகரெட்களுடன் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க