பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன.
இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் 3–ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–2, 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் லியோனர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனில் 12–வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் 1991–ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அதிக வயதில் கால்இறுதியை எட்டிய வீரர் என்ற பெருமையையும் 37 வயதான பெடரர் பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 11 முறை வெற்றியாளரும் 2–ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–2, 6–3, 6–3 என்ற நேர் செட்டில் ஜூவான் இக்னாசியா லோன்ட்ரோவை (அர்ஜென்டினா) வென்றார்.
இது நடால் பெற்ற 90–வது வெற்றியாகும்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3–வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் மாரிஸ் கோபில் கூட்டணி 6–1, 5–7, 6–7 (8–10) என்ற செட் கணக்கில் செர்பியாவின் லாஜோவிச்–டிப்சரேவிச் இணையிடம் தோல்வி கண்டது.
கருத்து தெரிவிக்க