விளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கழக கால்பந்தாட்டம்: லிவர்பூல் அணி மீண்டும் செம்பியன்

ஐரோப்பிய செம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் லிவர்பூல் அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

64–வது கழகங்களுக்கு இடையிலான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வந்தன.

32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட் நகரில் இறுதிப்போட்டி அரங்கேறியது.

இதன்போது லிவர்பூல் அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஹொட்ஸ்புரை வீழ்த்தி 6–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதற்கு முன்னர் 1977, 1978, 1981, 1984, 2005–ம் ஆண்டுகளிலும் லிவர்பூல் அணி இந்தக்கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.

கருத்து தெரிவிக்க