புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்: இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி இன்று

உலக கிண்ணக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இன்று பாகிஸ்தானை உலக சாதனை படைத்த ஆடுகளத்தில் சந்திக்கிறது.

இன்று நடைபெறும்; 6–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தானை நொட்டிங்காமில் எதிர்கொள்கிறது.

ஆரம்ப ஆட்டத்தில் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ஓட்டங்களால் வெற்றிக்கொண்ட இங்கிலாந்து அணி இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி தனது ஆரம்ப ஆட்டத்தில் மேற்கு இந்திய அணியை சமாளிக்க முடியாமல் 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

எனவே அந்த அணிக்கும் இது முக்கியமான போட்டியாக இருக்கிறது

கருத்து தெரிவிக்க