விளையாட்டு செய்திகள்

முன்னேறினார் நோவக் ஜோகோவிச் 

பிரெஞ் டென்னிஸ் போட்டி -அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச் 4  வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸில் நடைபெறும்  குறித்த போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3  வது சுற்று போட்டி நேற்று இடம்பெற்ற நிலையில் சேர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இலகு வெற்றியடைந்துள்ளார்.

இவர்   6–3, 6–3, 6–2 என்ற நேர்செட்களில் 147–ம் நிலை வீரரான சால்வாடோர் காருசோவை (இத்தாலி) தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை மற்றுமொரு  டென்னிஸ் போட்டியில்  உலக தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6–4, 6–2, 4–6, 1–6, 6–2 என்ற செட் கணக்கில் துசன் லாஜோவிச்சை (செர்பியா) வீழ்த்தி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 3 நிமிடம் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க