ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா கிடையாது என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,“ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எமது கட்சிக்குள்தான் இருக்கிறார்.
எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாது, எது சரியென படுகின்றதோ அதை துணிந்து செய்யக்கூடிய நபர்தான் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
கள்ளம் கபடமற்ற அந்த இளம் அரசியல் தலைவருக்கு மக்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். எனவே, அவர் யார் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள். ஆனால், அது தம்மிக்க பெரேராவாக இருக்காது என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.’’ என்றார் அமைச்சர் அஜித் பி. பெரேரா
கருத்து தெரிவிக்க