உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கையின் அணியின் திட்டமிடலில் முன்னேற்றம் அவசியம்

இலங்கை கிரிக்கட் அணியின் திட்டங்களில் முன்னேற்றம் அவசியம் என்று முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி நேற்று நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது.
இது தொடர்பில் கருத்து வெளியி;ட்டுள்ள குமார் சங்கக்கார. இலங்கை அணி, பயிற்சிப் போட்டிகளின்போது ஓரளவு விளையாடியது.

எனினும் நேற்றைய போட்டியில் அது கண்ட தோல்வி மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார்;.

இதில் அணியின் துடுப்பாட்டத்தை தக்கவைக்கும் வகையில் ஐந்தாவது வரவேண்டிய குசல் மெண்டிஸ், மூன்றாவதாக களமிறக்கப்பட்டமையானது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க