உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக்கு பாரம்பரிய கால அவகாசம் இல்லை ….

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்படாது என்று அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 1988ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜேஆர் ஜெயவர்த்தன தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

ஜேஆர் ஜெயவர்த்தன வெற்றிப்பெற்றதும் குறுகிய காலத்திலேயே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

எனினும் ஆர் பிரேமதாஸ டிசம்பர் 19ஆம் திகதி தேர்தலில் வெற்றிப்பெற்றபோதும் ஜனவரி முதலாம் திகதியே பதவியேற்றார்.

இவ்வாறான பதவியேற்புக்கான பாரம்பரிய காலம் வழங்கப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தற்போதைய ஜனாதிபதியும் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்ற விளக்கத்தை கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இதனைக்கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் உடனடியாகவே பதவியேற்பு இடம்பெறும் என்று அரச அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க