இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனத்தூதரகத்தின் பேச்சாளரை கோடிட்டு சீனாவின் அரச ஊடகமான சீன்ங்வா இதனை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இதன் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றே கூறமுடியும் என்று தூதரகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களில் தளர்வை கடந்த வாரம் அறிவித்திருந்த சீன தூதரகம் இலங்கைக்கு வருவோர் தனிப்பட்ட பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரியிருந்தது.
இந்தநிலையில் தமது பயண அறிவுறுத்தல் ஜூன் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க