விளையாட்டு செய்திகள்

அவுஸ்ரேலியா அணியை வீழ்த்த தயாராகும் ஆப்கானிஸ்தான்

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பிரிஸ்டொல் கௌன்ரி – பிரிஸ்டொல் மைதானத்தில் இன்று 1ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், ஆப்கானிஸ்தான் அணிக்கு குலாபதின் நய்ப்பும் தலைமை தாங்கவுள்ளனர்.

வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி, பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியிருந்து. அதே உத்வேகத்துடன் தற்போது அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வோர்னரின் மீள் வருகையால் இரட்டிப்பு வலுவடைந்துள்ள அவுஸ்ரேலியா அணி, சிறப்பான வளர்ச்சியை எட்டி சிறந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரண்டு அணிகளும் நல்ல முன்னேற்றத்துடன் களமிறங்குகின்றமையால், இப்போட்டியில் எந்த அணி சாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்து தெரிவிக்க