விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ணம் – இலங்கையை எதிர்கொள்ளும் நியூசிலாந்து

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்று 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சோபியா கார்டன்ஸ் – கார்டிப் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 2.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

உலகக்கிண்ண போட்டிகளை பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளும் இதற்கு முன்னதாக 10 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி ஆறு முறையும், நியூஸிலாந்து அணி நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இரு அணிகளினதும் கடந்த கால பொதுவான பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, நியூஸிலாந்து அணியே வலுவான நிலையில் உள்ளது.

கருத்து தெரிவிக்க