நேர்காணல்கள்

பெருந்தோட்டப் பகுதிகளில் மது பாவனையை ஒழிக்க புறப்படுவோம்

பெருந்தோட்டப்பகுதிகளில் பாவனையில் உள்ள மதுவை ஒழிப்பது தொடர்பில் அண்மையில் கண்டியில் அமர்வு ஒன்று இடம்பெற்றது.

இதில் அனைத்து சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

கண்டி மஹய்யாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் அஜே குருக்கள்

———————————————————————————————————

மதுவையும் போதையையும் ஒழிப்பதற்கு சமயங்களால் மட்டுமே முடியும். சட்டத்தால் எவ்வளவு தடுத்தாலும், தனி மனிதன் தனது மனதார அதிலிருந்து தவிர்ந்துகொள்ளாதவிடத்து அதனை ஒழிப்பது சிரமமாகும்.

சகல சமயங்களும் மதுவை வெறுக்கின்றன.

எனவே சர்வ மத அமைப்புக்கள் இணைந்து மதுஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

வணக்கத்துக்குரிய. தந்தை டெஸ்மன் பெரேரா

————————————————————————

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரே, சமூகத்தில் பொறுப்புள்ள பதவிகளை ஏற்று மக்களை வழி நடத்துவதாகக் காட்டிக்கொள்கின்றனர்.

சிலர் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கும் ஒருபுறத்தில் உதவுகின்றனர்.

இப்படி இனங்கான முடியாத தீயச் சக்திகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன.

இன்று போதைப் பாவனையை எடுத்துக்கொண்டால் அவற்றுக்கான விற்பனை சமய நிறுவகங்கள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள் போன்றவற்றுக்கு அருகிலேயே வெற்றிகரமாக நடக்கின்றன.

எனவே சமயத்தலைவர்களுக்கு போதை ஒழிப்பு தொடாபாக முக்கிய கடமை உண்டு.

கண்டி காட்டுப்பள்ளி இமாம் மௌலவி ரிஸ்வான்

—————————————————————————–

போதை ஒழிப்பு தொடர்பாக பாரிய எதிர்ப்புப் பேரணிகள், ஆர்பாட்டங்கள், உட்;பட பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில் அதனையும் மீறிய விதத்தில் போதை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மிகக் கச்சிதமாக திட்டமிட்டு அரங்கேறுகின்றன.

குறுகிய காலத்தில் கூடுதல் பணமீட்ட ஆசைப்படுவோர் போதைப்பொருள் வர்த்தகத்தை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

போதைப் பொருள் விற்பனையாளர்களே போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கும் தூரதிஷ்டநிலையும் ஏற்படுகிறது.

போதைப்பாவனைக்கு குடும்ப அலகு முக்கியமான காரணியாக மாறியுள்ளது.

முன்னர் மாலையாகி விட்டால் சகல அங்கத்தவர்களும் வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.

காலம் தாழ்த்தி வருவதும் இல்லை.

அப்படி காலம் தாழ்த்தி ஒருவர் வந்தால் அவரைத் தேடி அலைவார்கள்.

எனினும் இன்று சமூக உறவு நிலைகளும் ஏனைய காரணிகளும் இந்த நிலையை மாற்றியுள்ளன.

கணவன் மனைவி என இருபாலாரும் உழைக்கச் சென்று விடுகின்றனர். பிள்ளைகள் பிரத்யேக வகுப்பு உட்பட்ட பல விடயங்களுக்காக வெளியே சென்று விடுகின்றனர்.

மாலையில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெறுவதில்லை.

பிள்ளைகள்,கையடக்கத் தொலைபேசியிலே காலத்தைக் கழிக்கின்றனர்.

எனவே எமது வாழ்க்கை வட்டத்தை சீராக்காத வரை இந்தப்;போராட்டத்தில் இருந்து வெற்றி பெறமுடியாது.

சமூகப்பிரதிநிதி வீ.ராஜேஸ்வரி

—————————————————–

போதைப்பொருளுக்கு எதிராக கூட்டாக இணைந்து செயற்பாடுகளை முன் எடுக்க வேண்டும்.

இல்லையெனில் தனி நபர்கள் அச்சுறுத்தப்படலாம்.

அத்துடன் போதைஒழிப்புக்கு நிறுவன ரீpதியான உதவிகளும் ஒத்தாசையும் தேவை.

விழிப்புணர்வை ஏற்படுத்த அமைப்பு ரீதியான பணிகளும்; தொடர வேண்டும்.

மஹய்யாவ சர்வமத அமைப்பின் தலைவி சகுந்தலா

போதைப் பாவனையை கட்டுப்படுத்துவற்கு தனி நபரால் முடியாது.

சத்தம் வரவேண்டுமாயின் இரண்டு கைகளையும் தட்டவேண்டும்.

எனவே ஏதாவது ஒரு அமைப்பு ரீதியில் இணைந்து போராட்டத்தை முன் எடுக்க வேண்டும்

கண்டி கெரிடாஸ்; நிறுவன ஊடக இணைப்பாளர் எஸ்.நிக்கலஸ்

————————————————————————————————

அனேகரது வீடுகளில் மதுப்பாவணையும் புகைத்தலும் உண்டு.

எமது வீடுகளில் உள்ள குடும்பத் தலைவிகளால் தமது கணவன்மார்; புகை பிடிப்பதை நிறுத்த முடியாதுள்ளது.

திருமண வைபவம் என்றாலும். மரண வீடு என்றாலும் மதுவுக்;கே முதலிடம்.

எனவே குடும்பத்தலைவிகள் தமது கணவன்மாரை மாற்றியமைக்க முயலவேண்டும்.

மஹய்யாவ சமூக காவல்துறைக் குழு அங்கத்தவர் சுப்பையா.

———————————————————————————————-

திறந்த பொருளாதாரம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து பல்வேறு பொருட்கள்; நாட்டுக்குள் வர ஆரம்பித்தன.

இதில், வேண்டத்தகாத பொருட்களும் வந்து சேர்ந்துள்ளன.

அதில் ஒன்றுதான் போதைப் பொருற்களாகும். அவற்றைக் கட்டுப்படுத்த இறுக்கமான சட்டங்கள் வேண்டும்.

செட்டிக் நிறுவனத்தின் இணைப்பாளர் சிவக்குமார்

—————————————————————————–

போதை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வ மத அமைப்புக்கள்; இணைந்து செயற்படுவேண்டும்.

அத்துடன் அறநெறிப்பாடசாலைகள், சமய திருவிழாக்கள், சமய தினங்கள்(பெருநாள், பண்டிகைகள்;) போன்றவற்றின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தல்,

சிறுவர் குழுக்களை அமைத்தல், இளைஞர் குழுக்கள் மூலம் அனுபவப்பகிர்வு போன்றவற்றை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகள் பயனைத்தரும்.

பொது நலச் செயற்பாட்டாளர் எஸ் ராஜேஸ்வரி

—————————————————————————-

இன்று சில தாய்மார்கள் பிரசவத்தின் பின் மது அருந்துகின்றனர்.

உற்சவக்காலங்களில் வீடுகளில் மது பரிமாறப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள், மதுவை சாதாரண ஒரு பானமாக சிறுவர்கள்; மனங்களில்; பதியவைக்கிறது.

உடனடியாக இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

கருத்து தெரிவிக்க