அழகு / ஆரோக்கியம்

உணவே மருந்து மருந்தே உணவு

தமிழ் பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் மருத்துவமுறையிலேயே சமைக்கப்படுகின்றன.

மஞ்சளுக்கு நெஞ்சிலுள்ள சளியை நீக்கும் தன்மை உள்ளது.

கொத்தமல்லி- பித்தத்தைப் போக்கும்.

சீரகம்- வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.

மிளகு-தொண்டைக்கட்டை இல்லாமல் செய்யும்.

பூண்டு- வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை அதிகரிக்கும்.

வெங்காயம்- குளிர்ச்சி உண்டாக்கும் அத்துடன் குருதியைத் தூய்மைபடுத்தும்.

பெருங்காயம் வாயுவை வெளியேற்றும்.

இஞ்சி, பித்தத்தை ஒடுக்கும். காய்ச்சலுக்கும் சிறந்தது.

தேங்காய்- நீர்க்கோவையை நீக்கும்.

கறிவேப்பிலை- உண்ணும் விருப்பத்தை ஏற்படுத்தும்;.

நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

சீரகம் பூண்டு கலந்த மிளகு -நீர், சூட்டைத் தணித்துச் செரிமான

ஆற்றலை மிகுவிக்கும்.

கீரை – உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும்

நல்லது.

எலுமிச்சை ஊறுகாயை மோர்ச்சோற்றுடன் உண்டால்,

உடலுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு; பித்தம் போக்கப்படும்.

உப்பு. இதனைக் குறைவாகக் சேர்த்தல் சிறப்பு.

உப்பு நிறைந்த பொருள்களான ஊறுகாய், அப்பளம், வடாம்,

கருவாடு, முந்திரிப்பருப்பு, வறுத்த உருளைச் சீவல், வாழைக்காய்ச்

சீவல், புளித்தமோர் முதலியனவற்றை முழுவதுமாகத் தவிர்த்தல் நல்லது.

கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர்,

நெய், வெண்ணை, பாலாடை, பனிக்கூழ், இனிப்புக்கட்டி ஆகியவை நீக்கப்படல்வேண்டும்.

காரமும் புளிப்பும் மிக்க உணவுகள் கூடாது.

எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை ஒதுக்குதல் சிறப்பு.

நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு என்பது பழமொழி. நொறுக்குத் தீனி கூடவே கூடாது.

இடையிடையே எதனையாவது தின்பதும் கொறிப்பதும் உடலுக்கு நல்லது இல்லை.

உண்ணும் முறை :

• எளிதில் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை,

பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது.

நாச்சுவை கருதி உண்ணாமல், உடல்நலங்கருதி உண்ணுதலே நல்லது.

உணவை விரைவாக விழுங்குதல் கூடாது, நன்றாக மென்று

விழுங்குதல் வேண்டும்.

அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.

உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும், அது செரிக்காது, குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும்.

உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல்

வேண்டும்.

வேகவைத்த காய்கறி நீரில் மிகுதியான சத்துகள்

இருப்பதனால், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது :

தண்ணீரும் மருந்தே. நீரின்றியமையாது உலகு என்பது வள்ளுவம்.

இயற்கை உணவுப்பொருள்களில் நீரில்லாத உணவுப்பொருள்களே இல்லை.

எல்லாவகையான உணவுப் பொருள்களும் விளைவதற்குக் காரணமாக அமைவது நீர்.

உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கும், குருதி தூய்மை

பெறுவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும்

நீர் இன்றியமையாதது.

எனவே, நீரைத் தேவையான( நாளொன்றுக்குக்

குறைந்தது மூன்று லீட்டர் ) அளவுக்குக் குடித்தல் உடலுக்கு நல்லது.

உணவு உண்ணும் போது இடையில் நீர் குடித்தல் கூடாது.

சமச்சீர் உணவு :

ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து,

கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவாகும்.

எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது ஒவ்வொருவரின் கடமை

சோறும் காய்கறியும் அரைவயிறு பால், மோர், நீர் கால்வயிறு,

கால்வயிறு வெற்றிடமாக இருத்தல் வேண்டும். வயிறு புடைக்க

உண்ணுதல் நோய்க்கு இடமளிக்கும்.

எனவேதான், ஒளவையார் மீதூண் விரும்பேல் என்றார்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி.

வயது ஏறும்போது கொழுப்புச்சத்துள்ள உணவின் அளவைச் சிறிது

சிறிதாகக் குறைத்துக்கொண்டே வருதல் வேண்டும்.

உணவைக் கட்டுபடுத்துவதொடு எளிய உடற்பயிற்சிகளையும் செய்தல் வேண்டும். நடைபயிற்சியே எளிய உடற்பயிற்சி.

‘நாள்தோறும் தவிராமல் நடந்தால் நோய் நம்மைவிட்டு நடக்கும்,

ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும், எப்போதும் படுத்துக் கிடந்தால் நோய் நம்மீது படுத்துக்கொள்ளும்.

காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே என்று கவிமணி கூறியுள்ளார்.

உடல்நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை

மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம்.

உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்டால் மருந்தென்பதே உடலுக்குத் தேவை இல்லை.

திருமூலரும் உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியுள்ளார். நாடு நலம்பெற நல்லுடல் பெற்ற மக்கள் தேவை. நல்லுடல் பெற நல்லுணவு முறையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. – திருமூலர்.

அந்த வகையில் அறுசுவையின் பயன்கள் :

இனிப்பு – வளம்.

துவர்ப்பு – ஆற்றல்.

கைப்பு – மென்மை.

கார்ப்பு – உணர்வு.

உவர்ப்பு – தெளிவு.

புளிப்பு – இனிமை.

 

கருத்து தெரிவிக்க