உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மொஹமட் ஷாபியின் இடத்தில் சிங்கள வைத்தியர் இருந்திருந்தால்…? அமைச்சர் ராஜித

வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்புள்ள குற்றச்சாட்டு விடயத்தில் சிங்கள வைத்தியர்; ஒருவர் இருந்திருந்தால், ஊடகங்கள் இந்தளவு அக்கறை செலுத்தியிருக்காது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியர் ஷாபியை பதவியில் இருந்து விலக அமைச்சரவை அனுமதியை தாம் கோரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீவிரவாதக்குழுக்களுக்கு நிதியளித்ததாக அமைச்சர் இதன்போது குற்றம் சுமத்தினார்.

ஆமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர், ஜே ஆர்; ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க