உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கத்தவறிய குற்றச்சாட்டின்பேரில் ஐந்து பேரிடம் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பதில் காவல்துறை அதிபர் சீடி விக்கிரமரட்ன உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்ணான்டோ மற்றும் விசேட அதிரடிப்படையின் தளபதி தேசியப்புலனாய்வு தலைவர் மற்றும் மேல்மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரிமே முழுமை விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின்பேரிலேயே பதில் காவல்துறை அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க