இலங்கை தொடர்பான பாதுகாப்பு ஆய்வாளர் ரொஹான் குணரட்ன நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கடந்த வாரம், வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆங்கில செய்தித்தாளில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ரொஹான் குணரட்ன, கடந்த வாரப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இதன்போது நடப்பு அரசாங்கத்;தின் காலத்தில் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டமையானது பாதுகாப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக அவர் குறி;ப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் சுமார் 500 புலனாய்வு அதிகாரிகளின் பணிகளை முடக்கிவைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கையின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குணரட்னவின் கருத்துக்களை மறுத்துள்ளனர்.
போரின் பின்னர் மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே சோதனை சாவடிகள் அகற்றப்பட்டமையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் புலனாய்வாளர்களின் பணிகள் முடக்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
இந்தநிலையில் ரொஹான் குணரட்னவின் கருத்துக்கள் முற்றிலும் முரணானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து தெரிவிக்க