ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவூதிக்கு விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அனுமதியளித்துள்ளார்.
இன்னுமொரு நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.
ஆனால், ஈரானிய விவகாரத்தை காரணம் காட்டி இந்த அனுமதி பெறப்படாமலேயே ஆயுதங்கள் விற்கப்படுகின்றன.
அதுபோல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக அமரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார்.
எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக ஈரான் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனினும் ஈரான் இதனை மறுத்துவருகிறது.
கருத்து தெரிவிக்க