சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? போட்டி ஆரம்பம்

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து தெரீசா மே விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில் வெற்றிப்பெறுகின்றவரே கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின்; அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்.

எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் ஏழாம் தேதி தாம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ள தெரேசா மே, கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை நான்கு வேட்பாளர்கள் இந்தப் பதவிக்காக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட்
சர்வதேச மேம்பாட்டுத்துறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட்
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன்
முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோரே அந்த நால்வராவர்.

ஜூன் இரண்டாம் வாரம் வரை இந்த பதவிக்காக யாரும் விண்ணப்பிக்கலாம். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ண்ணப்பித்தவர்களில் இறுதியில் இருவர் தெரிவுசெய்யப்பட்டு ஜூலை மாதம், அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கருத்து தெரிவிக்க