சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதங்களை அகற்றி, சருமத்தை சுத்தம் செய்யவும், சருமத்திற்கு இதமளிக்கவும், வெள்ளரிக்காய் அற்புதமாக உதவுகிறது.
வெள்ளரிக்காயுடன் உருளைக் கிழங்கு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்ந்து சருமத்தில் உள்ள துளைகளைத் திறக்கின்றன.
அதிக எண்ணெய்யை அகற்றுகின்றன, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகின்றன. இதனால் கட்டிகள், தழும்புகள், பருக்களால் உண்டான புள்ளிகள் ஆகியவை குறைகின்றன.
மஞ்சளின் பக்டீரியா எதிர்ப்பு தன்மைக் காரணமாக சருமத்தை பளபளப்பாக வைக்க மஞ்சள் உதவுகிறது மேலும், தொற்று பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியாக்களை சரும மேற்பரப்பில் இருந்து அழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.
தேவையான பொருட்கள் . 2 ஸ்பூன் உருளைக் கிழங்கு சாறு . 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு . 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு . ஒரு சிட்டிகை மஞ்சள் செய்முறை . மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். .
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். . இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும். . காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். . ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.
கருத்து தெரிவிக்க