இந்திய பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சிக் கூட்டணி தெளிவான வெற்றியை பெற்றுள்ளது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி அந்தக்கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 81 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஏனைய கட்சிகள் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 542 ஆசனங்களில் இதுவரை 514 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
எஞ்சியுள்ள ஆசனங்களிலும் பாரதீய ஜனதாக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் வலிமையான இந்தியாவை உருவாக்கப்போவதாக பிரதமர்; நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஹ_ல் காந்தி தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தமிழக இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 22 ஆசனங்களில் 17க்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் திராவிட முன்னேற்றக்கழகம் 10 ஆசனங்களையும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 7 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்துக்கான 38 ஆசனங்களில் 35க்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் திராவிட முன்னேற்றக்கழகம் 34 ஆசனங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு ஆசனத்தில் மாத்திரம் அண்ணாத்திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க