அரச உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதி பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
கடந்த 14/05/2019 அன்று கடமைக்காக சென்றிருந்த கொக்குளாய் மேற்கு கிராம உத்தியோகத்தர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரால் முகத்துவாரப்பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.
தமது கள விஜயமாக சென்றிருந்த கிராம உத்தியோகத்தரும்,அபிவிருத்தி உத்தியோகத்தரும் முகத்துவாரத்தில் அமைக்கப்பட இருந்த தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை இனத்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டது.
கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டு அவருடைய மோட்டார் வண்டி திறப்பு பறிக்கப்பட்டு ,கடமை நாட்குறிப்பேடும் பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிசில் கடந்த 15 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் கடந்த ஒரு வாரமாக எடுக்கவில்லை.
இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 22ஆம் திகதி. அன்று கைதுசெய்துள்ளார்கள்.
இன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களை அழைத்த முல்லைத்தீவு பொலீசார் இருபகுதியினையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட வேளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கிராம அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்தே அவரை பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்
இதன்போதே அரச உத்தியோகத்தருக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் குறித்த நபரை எதிர்வரும் 03.06.19 வரை விளக்கமறியவில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க