நேர்காணல்கள்புதியவைமலையகச் செய்திகள்

பெருந்தோட்டத்துறையில் 50 ஆயிரம் ஹெக்டேயர் காணி கைவிடப்பட்டுள்ளது

1992 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருந்தோட்டத்துறையி;ல் 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேயர் காணி இருந்தது.

இன்று 75 ஆயிரம் ஹெக்டேயரைதான் பயன்பபாட்டைத் தருகிறது.

ஏனைய நிலப்பரப்பு காடுகளாக காட்சிதருகின்றன.

சுமார் 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளது.

‘’பெருந்தோட்டப் பகுதிகளில் உற்பத்தி திறனை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப் படுவதில்லை.

60 சதவீதமான தேயிலைச் செடிகள் 150 வருடங்களுக்கு மேல் பழமையானவை.

இதனால், தொழிலாளர்களின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது உட்பட மேலும் சில காரணங்களாலேயே மக்கள் வெளியிடங்களுக்கு தொழிலுக்கு செல்கின்றனர்.’’ -இவ்வாறு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையானரான கலாநிதி எஸ். சந்திரபோஸ் தெரிவித்தார்.

தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர், பெருந்தோட்டங்களின் இன்றைய நிலைமை, மாற்றுப்பயிர் செய்கைகளுக்கு ஏன் முக்கியத்துவம் வழங் கப்படுகின்றன.

அத்துடன் தொழிலாளர்களுக்கு தேயிலைச் செடிகளை பகிர்ந்தளிக்கும் வெளிவாரி உற்பத்தி முறைமை உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில்‘ ஊடகன்’ வார இதழுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் தகவல்களை வெளியிட்டார்

பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந் தது ஏன்? 1992ஆம் ஆண்டில் பெருந் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர், 1998 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட தொழி லாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சமாக காணப்பட்டது.

எனினும், 2017 ஆம் ஆண்டு தரவுகளில் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களே பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

47 சதவீதமான தொழிலாளர்கள், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் களாக இல்லை.
அதாவது பெரும்பாலான தொழிலாளர்கள், தோட்டப்பகுதிகளில் நிரந்தரத் தொழிலாளர்களாக இல்லையென்றெ கூறவேண்டும்.

இதற்கு முக்கிய சில காரணங்களும் இருக்கின்றன.

பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உற்பத்திதுறையாக இருந்தாலும், கைத்தொழில் துறையாக இருந்தாலும் அதன் வளர்ச்சியானது உற்பத்தி திறனிலேயே தங்கியிருக்கின்றது.

எனினும், பெருந்தோட்டப் பகுதிகளில் இது தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவில்லை.
60 சதவீதமான தேயிலைச் செடிகள், சுமார் 150 ஆண்டுகள் பழமையானவையாகவே இருக்கின்றன.

இது அவர் களின் வருமானத்தில் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது.
அடுத்ததாக வீடு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி களை மேம்படுத்துவதற்கு கடந்த காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதனால் வறுமையானவர்களாக பெருந் தோட்ட மக்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

உரிய வேலைத்திட்டங்கள் முன் வைக்கப்படாததால் இனி மாற்றங்கள் வரப் போவதில்லையென பெரும் பாலானவர்கள் வெளியிடங்களுக்கு வேலைகளுக்கு சென்றனர். (தற்போது மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன) சராசரியாக தோட்டமொன்றில் 100 சதவீதமானவர்கள் வாழ் வார்களாயின் அவர்களில் 80 சதவீதமானவர்கள் தோட்டங்களில் வேலைசெய்வதில்லை.

தற்போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களைக்கூட முழுமை யாக பயன்படுத்துவதில் சவால்கள் இருப்பதாக கம்பனிகள் கூறுகின்றன.

இதனால் தற்காலிக தொழிலாளர்களை பயன்படுத்தி அதிக இலாபம் உழைக்கின்றன.
அடுத்த 25 வருடங்களுக்கு பெருந்தோட்டங்கள், தனியார் கம்பனிகள் வசமே இருக்கும்.

எனவே, அக்காலப்பகுதிக்குள் குறைந்த முதலீட்டில் எவ்வாறு உச்ச இலாபத்தை பெறலாம் என்பதிலேயே கூடுதல் கவனத்தை கம்பனிகள் செலுத்துகின்றன.

இதன்படியே பெருந் தோட்டப்பகுதிகளில் செம் பனை உட்பட மேலும் சில பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பெறுமதியான மரங்களும் வளர்க்கப்படுகின்றன.

தொடரும்

கருத்து தெரிவிக்க