இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது

நேற்று (ஏப்ரல் 13) கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்கல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் 50 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 180 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவரை கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க