புதியவைவணிக செய்திகள்

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளில் மாற்றம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனி 08 ரூபாவால் குறைக்கப்பட்டு 277 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 160 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 13 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 425 கிராம் எடையுடைய டின் மீனின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 279 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 02 ரூபாவால் குறைக்கப்பட்டு 162 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டு 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 575 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க