நேற்று (மார்ச் 09) எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த 20 வயதுடைய கனேடிய பெண்ணொருவர் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த பெண் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த பெண்ணை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க