இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

நேற்று (பெப்ரவரி 25) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாத் தலைமையில் கல்முனை மாநகர் பகுதியில் திடீர் உணவு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பரிசோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சுகாதாரமற்ற 5 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 70,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க