இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கிளிநொச்சியில் விபத்து

நேற்று (பெப்ரவரி 24) புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து விசுவமடு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் கயஸ் வாகனத்தில் பயணித்த மற்றொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க