உள்நாட்டு செய்திகள்

மஹிந்த அணியை தோற்கடிக்க சம்பந்தனின் உதவியை நாடினார் ரிஷாட்

” கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்.” – என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம்  கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்,  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசி ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரிஷாட்டால் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,

“ திருகோணமலையிலிருந்து நாளைதான் கொழும்புக்கு வருவேன்.  வந்ததும், இது குறித்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  கலந்துரையாடுவேன் . அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கிய  பின்னர் , பிரேரணை தொடர்பில் ஒரு முடிவை எடுப்பேன். அதன்பின்னர் உங்களுடன் நான் பேசுவேன். ” – என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மஹிந்த அணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க வைப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் ரிஷாட்டும், அவரின் சகாக்களும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

கருத்து தெரிவிக்க