” இலங்கையிலுள்ள அனைத்து மதரஸாக்களும் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட உயர்கல்வி தொடர்பான நாடாளுமன்றக்குழு, அது தொடர்பில் பிரதமருக்கு இன்று அறிக்கையொன்றை கையளித்தது.
அலரிமாளிகையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர்,
” இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தனியார் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் கல்வி தொடர்பான சட்ட திட்டங்களுக்கமையவே அவை இயங்கவேண்டும்.
நாட்டிலுள்ள மதரஸாக்கள் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படும். இந்த விடயத்தில் கல்வி அமைச்சும், முஸ்லிம் விவகார அமைச்சும் இணைந்து செயற்படமுடியும். இது தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க