குருணாகலை மாவட்டத்திலும் காலூன்றிய சஹ்ரான் குழுவினர், தென்னந்தோட்டமொன்றில் இரகசிய பயிற்சி முகாமொன்றை நடத்திவந்தமை விசாரணைகள்மூலம் அம்பலமாகியுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் மேலதிக விபரங்களை கண்டறிவதற்காக குருணாகலையில் கைதான அறுவரிடமும், காவல் துறையினர் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
குருணாகலை, அலகொலதெனிய பகுதியிலேயே இந்த இரகசிய பயிற்சி முகாம் இயங்கிவந்துள்ளதாகவும், பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே கைது வேட்டை தொடர்ந்ததாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இராஜகிரியவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளரும் குறித்த முகாமுக்கு வந்துசென்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, 21/4 தாக்குதலுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் 89பேர் காவல்துறை தடுப்பின்கீழ் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பைபேணி வந்துள்ளார். அவ்வமைப்பின் வழிகாட்டிலின்கீழேயே இலங்கையில் கொடூர தாக்குதலை அரங்கேற்றுவதற்கு அவர் திட்டம் வகுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க