நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர் இன்று, அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டனர்.
” பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.” என ஆறுமுகன் தொண்டமான் இதன்போது உறுதியளித்துள்ளார்.
பாடசாலையின் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்ற மறுத்து, மேல் மாகாண ஆளுநரின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 12 முஸ்லிம் ஆசிரியைகள் அண்மையில் இடமாற்றம் பெற்றுசென்றதால், இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக பெற்றோரும், பழைய மாணவர்களும் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை இ.தொ.கா. தலைவர் வழங்கியுள்ளார்.
அதேவேளை, ” இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாளை, இ.தொ.கா. தலைமையகத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் தெரிவித்தார். ” என்று பாடசாலையின் அதிபர் ‘ஊடகனிடம்’ தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க