யுக்ரெய்ன் நாட்டு ஜனாதிபதியாக 41 வயதான தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரான விளாடிமீர் செலன்ஸ்கி பதவியேற்றுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் அவர் ஆச்சரியமிக்க வெற்றியைப்பெற்றார்.
இந்தநிலையில் இன்று அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சட்டம் படித்த இவர் மக்கள் சேவகன் என்ற தொலைக்காட்சி தொடரை தயாரித்து அதில் ஜனாதிபதியாகவே நடித்தார்.
இது 2015 முதல் 2019 வரை ஒளிபரப்பானது.
இதனையடுத்து நாடக நிறுவனத்தினரே ஒரு கட்சியை தொடங்கினர்.
அதன் மூலம் போட்டியிட்டே செலன்ஸ்கி ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
கருத்து தெரிவிக்க