உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்

ரிஷாட்டால் மூன்றாக உடைகிறது ஐ.தே.க.!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இது விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட முடியாது என்றும், மனசாட்சியின் பிரகாரம் மக்கள் பக்கம் நின்றே வாக்களிக்க நேரிடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஐ.தே.கவின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அக்கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர், வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். இதனால்,  நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தால்  ஐக்கிய தேசியக் கட்சி தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க