இலங்கையில் 11 இணையத்தளங்களின்மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன், “தமிழ் ஈழம் சைபர் படை” என கூறப்படும் குழுவே, இலங்கைமீது சைபர் தாக்குதல் தொடுத்துள்ளது என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான .com மற்றும் .lk ஆகிய முகவரிகளைக் கொண்ட, இணையத் தளங்கள் நேற்றுக்காலை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்தன.
ரஜரட்ட பல்கலைக்கழகம், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றின் இணையத் தளங்களும் முடக்கப்பட்டன.
எனினும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முடக்கப்பட்ட இணையத்தளங்கள் மீண்டும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை அவசர கணினிப் பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க