உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுபவரும்,அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு தெரிந்தவர் என்று கூறப்படுபவருமான ஆள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இதனை இராணுவத்தலைமையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் கைதுசெய்யப்பட்ட பின்னரே இவரைப்பற்றி அமைச்சர் ரிசாத் பதியுதீன்,இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவைத் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்தப் பிரேரணை நாடாளுமன்ற விவாதத்துக்கு வரும்போது இரண்டு நாள் விவாதத்தை கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க